கஞ்சிப்பானை இம்ரான் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) – பிரபல பாதாள உலகக் குழு தலைவரான கஞ்சிப்பானை இம்ரான் என்றழைக்கப்படும் மொஹமட் நஜீம் மொஹம்மட் இம்ரான் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் முன்னிலைபடுத்த போதே குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் ஒருவர் வாழைத்தோட்டம் பொலிஸாரினால் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதன் பின்னர், குறித்த சந்தேகநபரை விடுவிக்குமாறு துபாயில் இருந்து கஞ்சிப்பானை இம்ரான் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *