இங்கிலாந்து அணி வெற்றி.

(UTV|SOUTH AFRICA) – தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 189 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

கேப்டவுனில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி, தமது முதல் இன்னிங்ஸில் 269 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இதையடுத்து துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களை பெற்றது.

பின்னர் இங்கிலாந்து அணி, தமது இரண்டாம் இன்னிங்ஸில் 8 விக்கட்டுக்களை இழந்து 391 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இதையடுத்து, 438 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 248 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *