டெங்கு நோயால் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

(UTV|கொழும்பு) – இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் தொற்று காரணமாக 2 ஆயிரத்து 272 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் டெங்கு நோய் தொற்று காரணமாக கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த வருடம் மாத்திரம் ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 587 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *