உடல் தாயாரிடம்; கணவன் தற்கொலை முயற்சி

(UTVNEWS | JAFFNA) –இறந்த மனைவியின் சடலத்தை தன்னிடம் ஒப்படைக்காமல் மனைவியின் தாயாரிடம் ஒப்படைத்தமையினால் ஆத்திரமடைந்த குறித்த கணவன் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான்கு பிள்ளைகளின் தாயான குறித்த குடும்பப்பெண் உயிரிழந்ததை அடுத்து அவரது கணவருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. பூநகரியில் இருந்து கணவர் மனைவியின் சடலத்தை வாங்குவதற்காக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு இன்று மாலை சென்றுள்ளார்.

அப்போது உயிரிழந்த குடும்ப பெண்ணின் தாயார் அவரது சடலத்தை பொறுப்பேற்று தங்களது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார் இதனால் விரக்தி அடைந்த குறித்த குடும்பத்தலைவர் வைத்தியசாலைக்கு முன்பாக தன்னுடைய மனைவியின் சடலத்தை யாரை கேட்டு அவர்களிடம் கொடுத்தீர்கள் என்று மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதேவேளை உயிரிழந்த குறித்த குடும்பப் பெண் தனது மரண வாக்குமூலத்தில் தனது கணவன் அடித்தமையினால் ஏற்பட்ட கண்டல் காயம் கல் காரணமாகவே தனக்கு புற்றுநோய் வந்ததாகவும் தான் உயிரிலந்தால் தனது சடலத்தை எனது அம்மவிடம் கொடுக்கவும் என கூறியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *