(UTV|கொழும்பு) – இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட 167 ஊழியர்களும் மீண்டும் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என மின்சாரம் மற்றும் மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னரே இவர்கள் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.