(UTV|கொழும்பு) – அரச கணக்காய்வு குழு மற்றும் கோப் குழு ஆகியன இன்று (07) கூடவுள்ளன. அதற்கமைய கோப் குழு இன்று பிற்பகல் இரண்டு மணிக்கும், அரச கணக்காய்வு குழு 2.30 க்கும் கூடவுள்ளது.
இரு குழுக்களுக்குமான உறுப்பினர்கள் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டனர்.
குறித்த இரு குழுக்களுக்குமான தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் ஏக மனதாக தெரிவு செய்யப்படவுள்ளனர்.