எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன் விண்ணப்பப்படிவங்களை சமர்பிக்கவும்

(UTV|கொழும்பு)- சுற்றாடல் மற்றும் வன பரிபாலன அமைச்சினால் வீதிச் சுவர்களின் மீது சித்திரங்களை வரைந்த இளைஞர்களை பாராட்டும் முகமாக விருது வழங்கும் வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விருதுகள் பிராந்திய, மாவட்ட மற்றும் தேசிய மட்டங்களில் வழங்கப்படவுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபை விண்ணப்பபடிவங்களை நாளை முதல் விநியோகிக்கவுள்ளது. விண்ணப்பதாரிகள் தங்களது விண்ணப்பங்களை கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக சமர்ப்பிக்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை கலை வேலைப்பாடுகளின் புகைப்படங்களுடன் இம்மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் பத்தரமுல்ல, ரொபேர்ட் குணவர்த்த மாவத்தையிலுள்ள சொபாதஹம் பியசவில் அமைந்துள்ள அமைச்சில் சமர்ப்பிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *