(UTV|கொழும்பு) – அரசினால் நடத்தப்படும் பரீட்சைகளில் தோற்றும் மாணவர்களுக்கு கணிப்பான்களை (calculator) பயன்படுத்த கல்வி அமைச்சு அனுமதியளிக்க தீர்மானித்துள்ளது.
தெரிவு செய்யப்பட்ட பரீட்சைகளுக்கே இந்த அனுமதி வழங்கப்படவுள்ளதாக கல்விச் சேவை இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சிலம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கணக்கியல் பரீட்சைகளில் இரண்டாம் பாகத்தை சுழற்சி முறையில் நடத்த எதிர்பார்க்கவில்லை எனவும் அது தொடர்பான நடைமுறையில் தற்போது மாற்றம் ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, க.பொ.த உயர்தர கணக்கியல் பரீட்சை, விஞ்ஞானவியல், தொழில்நுட்பம், பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான அறிவியல் ஆகிய பாடங்களில் (Non Programmable calculators) எனப்படும் கணிப்பான்களை பயன்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ.சனத் பூஜித நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.