சீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசரநிலை

(UTV|சீனா) – கொரோனா வைரஸின் பாதிப்பால் இதுவரை 2442 பேர் உயிர் இழந்த நிலையில் சீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசர நிலை என சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்தார்.

இதேவேளை, சீனாவை தொடர்ந்து, தென்கொரியா மற்றும் ஈரானில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியுள்ள நிலையில், இத்தாலியில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தென்கொரியாவை தொடர்ந்து, ஈரானிலும் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைய தொடங்கி இருக்கிறது. அந்த நாட்டின் குவாம் மற்றும் மர்காஷி மாகாணங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்டோருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த நாட்டு அரசு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன.

தென்கொரியா மற்றும் ஈரானை போல் ஐரோப்பிய நாடான இத்தாலியும் கொரோனா வைரசால் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. அந்த நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள லம்பார்டி, வெனேடோ உள்ளிட்ட பிராந்தியங்களில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *