கொரியாவில் உள்ள இலங்கையர்கள் தொடர்பு கொள்வதற்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

(UTV|கொழும்பு)- கொரியாவில் உள்ள இலங்கையர் தொடர்பில் 24 மணித்தியால தொலைபேசி சேவையை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முன்னெடுத்துள்ளது.

தற்பொழுது கொரோனா வைரஸ் தென்கொரியாவில் பரவிவருகின்ற நிலையில், அங்குள்ள இலங்கையர் எவரும் வைரஸினால் பாதிக்கப்படவில்லை என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அங்கு ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் இலங்கையர் எவருக்கும் பிரச்சினைகள் ஏற்படுமாயின் 24 மணித்தியாலமும் செயற்படும் தூதரகத்தின் தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொள்வதற்காக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

0082 – 27352966 / 0082 – 27352967 / 0082 – 27942668 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் இலங்கையர்களின் பிரச்சினைகள் தொடர்பாக தூதரகத்துக்கு அறிவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *