வனப்பகுதியில் ஏற்பட்ட தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள்

(UTV|ஹட்டன் ) – ஹட்டன் சிங்கமலை வனப்பகுதியில் நேற்றைய தினம் ஏற்பட்ட தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை விமானப்படையின் bell 212 ரக உலங்குவானூர்தி பயன்படுத்தப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தீப்பரவல் தொடர்பில் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் எவையும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வனப்பகுதிகளில் தீ வைப்பது தொடர்பில் பொது மக்கள் தகவல் வழங்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *