பணத்தால் கொரோனா வைரஸ்; என்ன செய்யலாம்

(UTVNEWS | COLOMBO) – ஒருவரிடமிருந்து கைக்கு கை மாறும் பணத்தால் கொரோனா வைரஸ் பரவுமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

இலங்கைக்குள்ளே இலங்கையைச் சேர்ந்த முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளர் இனங்காணப்பட்டதன் பின்னர் குறித்த அச்சம் மேலும் அதிகரித்துள்ளது.

இன்நிலையில், கொரோனா தொற்று நோய் பெரும்பாலும் சளி ,இருமல், தும்மல், வழியாகப் பரவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் முகக் கவசங்களுக்கு உலக அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளநிலையில், கைகள் வழியாகத்தான் தொற்று பரவுகிறது என்பதால் கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

கொரோனா அச்சம் பரவிய நிலையில் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி ஆசியாவில் இருந்து பெறப்படும் டொலர் நோட்டுகளை தனியாக வைத்து அவற்றை சோதித்த பின்னரே மறு சுழற்சிக்கு வெளியே அனுப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக சுகாதார அமைப்பும் இது குறித்த எச்சரிக்கை எதையும் விடுக்கவில்லை என்ற போதும் வங்கிகளில் இருந்து ரொக்கப் பணத்தைக் கையாளும்போது கைகளைக் கழுவிக் கொள்ளும்படி வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக அழுக்குப்படிந்த நாணய நோகட்டுகளையோ, காய்ச்சல் போன்ற அறிகுறி உடையவர்கள் பயன்படுத்தும் பணத்தை பரிமாற்றிக் கொள்வதன் மூலமும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதால் ஒன்லைன் பரிவர்த்தனையை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பணத்தை தொட்ட கைகளால் முகங்களையோ சுவாச பகுதியையோ தொடக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய பொருட்களை தொடும் போதும் அதீத கவனத்துடனேயே செயல்பட வேண்டும் எனவும் உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *