நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை நடத்த தடை

(UTV|கொழும்பு) – பொது மக்கள் அதிகளவில் கூடும், பொது மற்றும் தனியார் நிகழ்வுகளையும் கூட்டங்களையும் நடத்துவதற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சகல பொலிஸ் நிலைய பிரிவுகளுக்கும் ஒலிபெருக்கியின் மூலம் அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த 1897 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தொற்று நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் படி, தனிமைப்படுத்தப்படும் விதிமுறைகளை மீறும் எந்தவொரு நபரையும் பிடியாணையின்றி கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை இலங்கையில் 10 கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் விசேட வைத்திய கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *