(UTVNEWS | COLOMBO) -ஊடகவியலாளர்களுக்காக 2019 ஆம் ஆண்டு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை மே மாதம் 15ம் திகதி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, குறிப்பிட்டதற்கு அமைய மார்ச் மாதம் 31ம் திகதியில் இருந்து மேலதிகாக இருமாத காலவகாசம் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி, தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.