பசில் ராஜபக்ஸ தலைமையிலான செயலணிக்கு சிறப்பு அதிகாரங்கள்

(UTV| கொழும்பு) – மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணிச் செல்வதற்கான நடவடிக்கைகளை வழிநடத்துவதற்கான அதிகாரம் ஜனாதிபதியின் சிறப்பு பிரதிநிதி பசில் ராஜபக்ஸ தலைமையிலான செயலணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலணியின் செயலாளராக பிரதமரின் மேலதிக செயலாளர் அன்ரன் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

மாகாண ஆளுநர்கள், அமைச்சுகளின் செயலாளர்கள், முப்படைத் தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு உயர் அதிகாரிகள், திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட 40 பேர் செயலணியில் அங்கம் வகிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் பரவும் அபாயம் அதிகமுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு முக்கியத்துவமளித்து இந்த செயலணி செயற்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *