(UTV|கொழும்பு) – லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் https://www.litrogas.com என்ற இணைய தளத்தில் விநியோக பிரதிநிகளின் பட்டியலில் தமது பிரதேசத்தற்கான பிதிநிதியுடன் தொடர்பு கொண்டு சமையல் எரிவாயுவை வீட்டுக்கு கொண்டு வருவதற்கான வசதி தற்போதிருப்பதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டு மற்றும் நிகழ்ச்சிநிரல் முகாமையாளர் பியல் கொழம்பகே தெரிவித்துள்ளார்.
மேலும் 1311 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு லிட்ரோ கேஸ் சமையல் எரிவாயு பிரதேச விநியோக பிரதிநிதியின் மூலமாகவும் சமையல் எரிவாயுவை வீட்டுக்கே கொண்டுவர முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்