ஊரடங்குச் சட்டம் நீக்கம்; வர்த்தக நிலையங்கள் பூட்டு

(UTVNEWS | COLOMBO) – ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டாலும் நாட்டின் சில பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

அந்தவகையில், பதுளை மாவட்டத்தின் வெலிமடை, பண்டாரவளை, அப்புத்தளை மற்றும் தியத்தலாவ ஆகிய இடங்களில் உள்ள அனைத்து கடைகளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பண்டாரவளை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரி அத்துல டி சில்வா தெரிவித்துள்ளார்.

பண்டாரவளை நகரில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை கருத்தில் கொண்டே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் குறித்த காலத்தில் அத்தியாவசிய பொருட்களை மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டாலும் அநுராதபுரம் மாவட்டத்தில் கலேன்பிந்துனுவௌ, கஹாடகஸ்திகிலிய மற்றும் ஹொரவபொத்தான கண்டி, அக்குரணை ஆகிய நகரங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *