ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரமே ரயில் பஸ் சேவைகள்

(UTV|கொழும்பு)- ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரமே இன்றைய தினம் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் இடம்பெறும் என அமைச்சர மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அனைத்து பயணிகளும் முககவசங்களை அணிந்தருத்தல் அவசியம் என அமைச்சர மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

காய்ச்சல், இருமல், தடிமன் போன்ற நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் பொது போக்குவரத்தை தவிர்த்து கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம் நான்கு ரயில் சேவைகள் மாத்திரமே இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி போக்குவரத்து அதிகாரி டப்ளிவ்.டி.ஆர் பத்மலால் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு அனுமதி, மாதாந்த பருவச்சீட்டு மற்றும் பணியிட அடையாள அட்டை என்பனவற்றை பெற்றுக்கொண்டுள்ளவர்கள் மாத்திரமே இன்றைய தினம் ரயில்களில் பயணிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கரையோர மார்க்கத்தில் பெலியத்த முதல் ஒரு ரயில் சேவையும், காலியில் இருந்து ஒரு ரயில் சேவையும் இடம்பெறவுள்ளததுடன், பொல்கஹவலை வரை ஒரு ரயில் சேவையும், மஹவ நோக்கி ஒரு ரயில் சேவையும் இடம்பெறவுள்ளதாக என ரயில் திணைக்களத்தின் பிரதி போக்குவரத்து அதிகாரி டப்ளிவ்.டி.ஆர் பத்மலால் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *