(UTV | கொழும்பு) –நோர்வூட் சென்ஜோன் டிலரி மற்றும் கிவ் தோட்டப் பகுதியில் குளவிகள் கொட்டியதில் 14 ஆண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை தேயிலை மலைக்கு பசளை தூவிக் கொண்டிருந்தபோதே, இவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
தேயிலை மரத்தின் அடியில் இருந்த குளவிக் கூடொன்றின் மீது பசளை பட்டதன் காரணமாக குளவிகள் கலைந்து வந்து தொழிலாளர்களை கொட்டியுள்ளன.
குளவிகள் கொட்டியதில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளளனர்.