(UTV | கொழும்பு) – நான் ஒருதலைப்பட்சமாக பாராளுமன்றத்தைக் கூட்டப் போவதாக பரவும் வதந்தி பொய்யானது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
குறித்த அறிவிப்பை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
கொரோனாவு பிரச்சினைக்குள் அரசியலமைப்புப் பிரச்சினை தேவையில்லை. நான் ஒருதலைப்பட்சமாக பாராளுமன்றத்தைக் கூட்டப் போவதாக பரவும் வதந்தி பொய்யானது. பிரச்சினையைத் தவிர்க்க நிறைவேற்றுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். முரண்பாடுகளின் போது நீதிமன்ற கட்டளைக்கு மதிப்பளிப்பது எனது கடமையாகும்.
— Karu Jayasuriya (@KaruOnline) April 23, 2020
கொரோனா பிரச்சினைக்குள் அரசியலமைப்புப் பிரச்சினை தேவையில்லை. பிரச்சினையைத் தவிர்க்க நிறைவேற்றுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். முரண்பாடுகளின் போது நீதிமன்ற கட்டளைக்கு மதிப்பளிப்பது எனது கடமையாகும் என மேலும் தெரிவித்துள்ளார்.