மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்

(UTV | கொழும்பு) – இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோக பூர்வ ட்விட்டர் கணக்கில் இதனை பதிவிட்டுள்ளார்.

நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் (AIIMS) வைத்தியசாலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு அனுமதிக்கப்பட்ட  அவருக்கு தற்போது வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

87 வயதான  மன்மோகன் சிங் இரண்டு தடவைகள் இந்திய பிரதமாக கடமையாற்றியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *