(UTV|கொழும்பு) – ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் வரையறை அடிப்படையில் மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, மதுபானசாலைகளை சுகாதார நடைமுறைகளுடன் திறந்து விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில், உரிமம் பெற்ற பல்பொருள் அங்காடிகளில் (Super Market) மதுபான விற்பனைகளை முன்னெடுக்க முடியுமென அறிவிக்கபப்டுள்ளது.