(UTV | கொழும்பு) -மாளிகாவத்தையில் மாளிகாவத்தையில் நபர் ஒருவரினால் பணம் பகிர்ந்தளிக்கப்பட்ட போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் உட்பட 7 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர்களுக்கு ஜூன் மாதம் 4 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.