வெளிநாடுகளில் சிக்கியிருந்த 5485 இலங்கையர்கள் நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – கடந்த மே 25 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 20 நாடுகளில் சிக்கியிருந்த 5485 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அதில் ஒரு கட்டமாக கட்டாரில் இருந்து 268 பேர் இன்று அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் 5 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய சூழலில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்றைய (27) தினம் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் இந்த வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *