(UTV | கொழும்பு) – தேர்தல் நடவடிக்கைகளின் போது சுகாதார பரிந்துரைகள் எவ்வாறு செயல்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக தெரிவித்தார்.
இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் மருத்துவர் லக்ஷ்மன் கம்லத் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை, தேர்தலின் போது பின்பற்றவேண்டிய நடவடிக்கைகளை, சுகாதார அதிகாரிகள் அடுத்த சில நாட்களுக்குள் தேர்தல் ஆணைக்குழுவில் சமர்பிக்கவுள்ளனர்.