ஜனாதிபதியின் கையெழுத்தை பயன்படுத்தி மோசடி

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கையெழுத்தை மற்றும் கடித தலைப்பு என்பவற்றை மோசடியாகப் பயன்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் குருணாகல், யத்தம்பலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான ஒருவராவார்.

பணி நீக்கம் செய்யப்பட்டிருந்த இந்நபர், கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வுடன் மீள சேவையில் இணைத்துக் கொள்ளும்படி குறிப்பிட்டு ஜனாதிபதியின் கடித தலைப்பில் அவரது கையொப்பத்துடனான கடிதமொன்றை இலங்கை வங்கியின் தலைவருக்கு அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அது போலியானது என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் குமார என்ற குறித்த நபரை வங்கியின் தலைமையகத்திற்கு அழைத்த பின்னர் நேற்று கைது குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் செய்யப்பட்டுள்ளார்.

கடிதத்தை தயாரிக்க பயன்படுத்திய மடிக்கணினி மற்றும் ஏனைய உபகரணங்கள் பொலிஸார் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபரை எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *