(UTV|கொழும்பு)- மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலமொன்றை பதவி செய்துக் கொள்ளுமாறு சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு செயலாளர் நிஷாரா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமரின் ஆலோசகர் எஸ்.பாஸ்கரலிங்கம் மற்றும் வங்கி அதிகாரி ஒருவரிடமும் மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் வாங்குமூலம் ஒன்றை பதிவு செய்துக் கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.