ஜனாதிபதியின் 71 ஆவது பிறந்த நாள் இன்று

(UTV | கொழும்பு) – இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 07 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி கோட்டாபய ராஜபபக்ஷ தனது 71 ஆவது பிறந்த நாளை இன்று(20) கொண்டாடுகின்றார்.

1949 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி மாத்தறை மாவட்டத்தில் பாலதுவ பகுதியில் பிறந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபபக்ஷ கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவராவார்.

பாடசாலை கல்வி நிறைவுற்றதன் பின்னர் 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டார்.

இதனையடுத்து 1972 ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாவது லெப்டினனாக தனது கடமைகளை ஆரம்பித்தார்.

21 ஆண்டு இராணுவத்தில் பணிபுரிந்த கோட்டாபய ராஜபபக்ஷவின் சேவைக்கு பாராட்டுதல்கள் தெரிவிக்கும் முகமாக ‘ரணவிக்ரம’ மற்றும் ‘ரணசூர’ எனும் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு முதல் நாட்டின் பாதுகாப்பு செயலாளராக பணிபுரிந்துள்ளார்.

இதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Image may contain: 4 people, outdoor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *