(UTV|கொழும்பு) – கடந்த 48 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுடன் எவரும் அடையாளம் காணப்படவில்லை என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் இதுவரை 1950 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதுடன், கொரோனா தொற்றுக்குள்ளான 1498 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை 441 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.