எம்.சி.சி மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை இன்று ஜனாதிபதியிடம்

(UTV|கொழும்பு) – எம்.சி.சி மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை இன்று(25) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.

எம்.சி.சி மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை நேற்று(24) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டது.

அமைச்சரவையின் அனுமதியுடன், பிரதமர் நியமித்த குழுவானது எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் 6 மாதங்களாக ஆய்வு செய்துள்ளதுடன், பல்வேறு துறையினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை ஆராய்ந்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

சிபார்சுகள் அடங்கிய குழுவின் இந்த அறிக்கை பிரதமரினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *