நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,042 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம்(29) கொரோனா வைரஸ் தொற்றுதியான மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷ் – டாக்காவிலிருந்து நாடு திரும்பிய இருவரும் ஏனைய மூன்று பேரும் பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,678 ஆக உயர்வடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *