மேலதிக வகுப்புக்கள் – 500 மாணவர்களுக்கு அனுமதி

(UTV|கொழும்பு) – இரண்டு இடைவேளைகளின் அடிப்படையில் 500 மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக சுகாதார நிபுணர்களினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் தரப்பினரின் ஆலோசனைக்கமைய இதற்கான அனுமதியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வழங்கியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட மேலதிக வகுப்புக்களை, மீளத் திறப்பதில் ஏற்படுகின்ற சிக்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை, சாதாரணதரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை தினங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பரிசீலிக்குமாறு தொழில்சார் விரிவுரையாளர்கள் சங்கத்தினர் ஜனாதிபதியை கேட்டுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடனான முழுமையான ஆய்வுக்குப் பின்னர், பரீட்சைக்கான திகதிகளை நிர்ணயிப்பதை மீள் பரிசீலனை செய்யுமாறு கல்வி அமைச்சருக்கு ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *