(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 4 கடற்படையினர் பூரண குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இதுவரை 892 கடற்படையினர் பூரண குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிகை 2,081 ஆக அதிகரித்துள்ளது.