(UTV | கொழும்பு) – கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து வெளியேறிய கைதிகளை மீள அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அழைக்கப்படுபவர்கள் பரிசோதனைகளுக்காக அழைக்கப்படுவதாகவே அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் மீள அழைக்கப்பட்டும் கைதிகள் அச்சமடைய வேண்டிய தேவை இல்லை எனவும் அனில் ஜாசிங்க கூறியுள்ளார்.
மேலும், விடுமுறையில் சென்றிருந்த கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பணியாற்றும் சேவையாளர்களுக்கு மீள சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இதுவரை சமூகமளிக்காதவர்களை உடன் மீளத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு வருகை தருபவர்களை தொடர்ந்தும் பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சேவையாளர்களின் குடும்பத்தினரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தங்கவைக்கபட்டுள்ளவர்களை பார்வையிடுவதற்காக வந்தவர்கள் 116 பேர் இதுவரை தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுத்தப்பட்டுள்ளனர்.