போதைப்பொருள் பாவனையை தடுக்க ஜப்பான் நிவாரண உதவி

(UTV|கொழும்பு) -இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு ஜப்பான் அரசாங்கத்தினால் 200 மில்லியன் யென் (சுமார் 340 மில்லியன் ரூபா) இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல மற்றும் ஜப்பான் தூதுவர் சுகியமா அகிரா ஆகியோருக்கிடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் போதைப்பொருள் நடவடிக்கைகள் அதிரித்துள்ள நிலையில், போதைப் பொருள் கடத்தற்காரர்கள் மற்றும் அதற்கு அடிமையாகியுள்ள நபர்களை அடையாளம் காண்பதற்கான நவீன உபகரணங்களின் தேவை குறித்து பொலிஸாரினால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலும், தேவையான நவீன உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் ஜப்பான் அரசாங்கத்தினால் இவ்வாறு நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *