போதைப் பொருள் – பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு கடுமையான தண்டனை

பாலியல் துஷ்பிரயேகங்களுக்கு கடுமையான தண்டனை

(UTV | கொழும்பு) – போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாலியல் துஷ்பிரயேகங்களில் ஈடுபடுவோர் ஆகியோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

இரத்தினபுரி – சீவலி விளையாட்டரங்கில் நேற்று(19) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இதனை தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், கொழும்பு முதல் இரத்தினபுரி வரையிலான அதிவேக வீதிக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், அவிசாவளை முதல் ஓப்பநாயக்க வரையிலான பழைய ரயில் மார்க்கத்துக்கு உரிய இடங்களில் வசிக்கும், 35,000 இற்கும் அதிகமானோருக்கு சட்டரீதியான காணி உரிமம் இல்லாமை குறித்தும் இதன்போது ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சுரங்கத் தொழிலாளர்கள் குறித்த அனைத்து அனுமதிப் பத்திரங்களையும் ஒரு நிறுவனத்தின் ஊடாக வழங்கவும் ஜனாதிபதி இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *