(UTV | கொழும்பு) – அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக 8 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று(23) இரவு 10 மணி முதல் மறுநாள் வெள்ளியன்று காலை 06 மணி வரைக்கும் பத்தரமுல்லை, கொஸ்வத்தை, தலஹேன, மாலபே, ஜயவதனகம மற்றும் தலவத்துகொட ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பின் சில பகுதிகளில் இன்று (23) இரவு 10 மணி முதல் நாளை (24) மதியம் 12 மணி வரையில் 14 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாகவும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் எதுல் கோட்டை, புறக்கோட்டை, பத்தேகம, உடஹமுல்ல, கங்கொடவில, மாதிவெல, தலபத்பிடிய, நுகேகொடை, பாகொடை, நாவலை, மொரகஸ்முல்லை, ராஜகிரிய, கொழும்பு 05, 07 மற்றும் 08 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோல், கொழும்பு 04, 06, மஹரகம மற்றும பொரலஸ்கமுவ பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என குறித்த சபை குறிப்பிட்டுள்ளது.