(UTV|கொழும்பு) – 5 ஆயிரம் ரூபா கொடுத்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பெற முயன்ற குற்றச்சாட்டில் இருவர் பேருவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களின் வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, ஏனைய இருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.