(UTV|கொழும்பு) – தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள சந்தேக நபர்கள் தொடர்பில் சட்ட மா அதிபரிடம் ஆலோசனை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலப்பகுதியில் சட்டவிதிமுறைகளை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்களை சட்டமா அதிபரிடம் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.