(UTV|கொழும்பு) – நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகளை இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகின்றது.
முதலாம் தரம் முதல் 10 ஆம் தரம் வரையான மாணவர்களுக்கு இன்று முதல் பல கட்டங்களின் கீழ் பாடசாலைளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் நாளைய தினம் இரண்டாம் மற்றும் 5 ஆம் தர மாணவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவர்.
இதேவேளை, 200 மாணவர்களுக்கு கூடுதலாக உள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு கல்வி நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 நிலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தும் வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என்று கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்தார்.