மாவைக்கு சம்பந்தன் கோரிக்கை

(UTV | கொழும்பு) – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசனம் தவராசா கலையரசனுக்கு வழங்கப்படுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த தீர்மானத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்றை தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் கூறுகையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசனத்திற்கான பிரிதிநிதி தன்னிச்சையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசியப் பட்டியல் ஆசன தெரிவு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் பங்காளிக் கட்சிகளான புளொட் மற்றும் ரெலோ கட்சிகளுக்கும் அறிவிக்கப்படாமலேயே முடிவெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த முடிவு ஒட்டுமொத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் முடிவு இல்லை. எமக்கு அறிவிக்கப்படாமல் இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டமைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

குறித்த தேசியப் பட்டியல் ஆசனத்தை மாவை சேனாதிராஜாவுக்கு வழங்குவதே சிறப்பானது. இது குறித்து பரிந்துரைக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பாக கட்சிக்குள் எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *