(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் ஆகியோரை எதிர்வரும் 28ம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் சர்ச்சைக்குரிய ஊடக சந்திப்பொன்றினை நடாத்தியிருந்த நிலையில் இது தொடர்பிலான விசாரணைகளுக்கே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.