பிரதமர் மஹிந்த கடமைகளை பொறுப்பேற்றார்

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் அலரி மாளிகையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

++++++++++++++++++++++   UPDATE 07:30AM

பிரதமர் மஹிந்த இன்று தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று(11) அலரி மாளிகையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளார்.

நேற்று முன்தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் களனி ரஜமஹா விகாரையில் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஆகக் கூடுதலான வாக்குகளை பெற்று இலங்கை வரலாற்றில் தேர்தலில் அதிகளவான வாக்கை தனதாக்கியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதேவேளை சுபீட்சத்தின் நோக்கு விஞ்ஞானபத்தை நடைமுறைப்படுத்தி நாட்டை பாதுகாத்து அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவட்ட மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நன்றி தெரிவித்து அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

தனது அரசியல் மிகவும் நெருக்கடியான காலத்தில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட போது மாவட்ட மக்கள் வழங்கிய ஆதரவை பிரதமர் நினைவுபடுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *