புவனேகபாகு ஹோட்டல் – மேயர்  கைது செய்ய 6 விசேட குழுக்கள்

(UTV | கொழும்பு) – பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள குருநாகல் நகர மேயர் துஷார சஞ்ஜீவ விதாரண உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை கைது செய்வதற்கு 6 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களின் தொலைபேசி கலந்துரையாடல் ஊடாக, அவர்கள் தங்கியுள்ள இடங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குருநாகல் நகர மத்தியில் அமைந்திருந்த இரண்டாவது புவனேகபாகு மன்னர் பயன்படுத்தியதாக கருதப்படுகின்ற அரசவை கட்டடம் தகர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் நகர மேயர் துஷார சஞ்ஜீவ விதாரண, நகர ஆணையாளர் பிரதீப் நிஷாந்த திலகரட்ண, நகரசபை பொறியியலாளர் ஷமிந்த பண்டார அதிகாரி உட்பட ஐவரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குருநாகல் நீதவான் நீதிமன்றம் கடந்த 7 ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் நேற்றைய தினம் மீளவும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *