பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு)- இன்று பிற்பகல் 3 மணிக்கு அரசியலமைப்பின் 33 (2) உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை தொடர்ந்து, நாளை(21) காலை 9.30 மணி வரையில் பாராளுமன்றத்தை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

9 வது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.

பாராளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் 9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *