(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 09 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதற்கமைய இதுவரையில் 2798 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 132 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2941 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.