சிங்கராஜா : 500 மில்லியன் நஷ்டஈடு கோரும் யோஷித

(UTV | கொழும்பு) –  சிங்கராஜ வனத்திற்கு அருகில் தனக்கு சொந்தமான ஹோட்டல் இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யோஷித்த ராஜபக்ஷவின் ஹோட்டலுக்கு செல்ல வீதி வசதியை ஏற்படுத்தவே சிங்கராஜ வனத்தின் ஊடாக லங்காம வரை வீதி நிர்மாணிக்கப்படுவதாக சுற்றாடல் ஆர்வலர் சஞ்ஜீவ சாமிகர ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், அது சம்பந்தமாக தனது சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் யோஷித்த குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பில் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை ஊடகங்களில் தெரிவித்து வரும் சுற்றாடல் ஆர்வலர் சஞ்ஜீவ சாமிகரவுக்கு எதிராக 500 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில தரப்பினர் மீண்டும் ஒரு முறை ராஜபக்ஷவினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சித்து, பொய் பிரச்சாரங்ளை செய்து வருகின்றனர்.

எனக்கு சொந்தமான ஹோட்டலோ, விடுமுறை விடுதியோ காட்டிற்குள் இல்லை. இது மக்களை தவறாக வழிநடத்த மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம்.

அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் யோஷித்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *