ரயில் தடம்புரள்வு – அனைத்து ரயில் சேவைகளும் பாதிப்பு

(UTV | கொழும்பு) – மருதானை ரயில் நிலைய அருகில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டமை காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காலை 8.50 மணிக்கு தலைமன்னார், யாழ்ப்பாணம் நோக்கிப் பயணமாகும் கடுகதிப் புகையிரதமே இவ்வாறு தடம்புரள்வுக்கு உள்ளாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *