இலங்கையில் இளைஞர்களிடையே HIV தொற்று அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – இலங்கையில் இளைஞர்களிடையே HIV தொற்று அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 19 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே HIV தொற்று அதிகரித்துள்ளதாக நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தினூடாக சிகிச்சை பெறும் நோயாளர்களின் தரவுகளூடாக இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அறிவியல் கணக்கெடுப்பின்படி, 2020 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 3,600 HIV தொற்றுக்குள்ளானோர் இருத்தல் வேண்டும் என கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் இதுவரை 2,000 பேர் வரையிலேயே சிகிச்சைக்கு பதிவு செய்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய 1,600 பேரும் தமக்கு ஏற்பட்டுள்ள தொற்று குறித்து அறியாமல், சமூகத்தில் ஏனையவர்களை தொடர்பு கொள்வதற்கான சாத்தியம் உள்ளதாக வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய நிலைமை தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏறிபடுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் அடுத்த மாதம் முதல் முன்னெடுக்கப்படவிருப்பதாக விசேட வைத்திய நிபுணர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *