தப்பிக்க வழியில்லை –  கைதாகும் மைத்திரி

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுத் தாக்குதல் தொடர்பிலான பிரதான சந்தேக நபராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைது செய்யுமாறு அரசியல்வாதிகள் பலர் பகிரங்கமாக கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பிலான கருத்துக்கள் இந்நாட்களில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்திருந்த மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார;

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ சாட்சியமளிக்கையில், குறித்த குண்டுத் தாக்குதலுக்கு தான் பொறுப்பு எனக் கூறி பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு பதவி விலகுமாறு முன்னாள் ஜனாதிபதி கோரியிருந்ததாக ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

அவ்வாறு பதவி விலகினால் குழு அறிக்கையில் மாற்றம் ஏற்படுத்தி, ஓய்வூதியத்துடன் வெளிநாட்டு தூதுவராக நியமிப்பதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்திருந்ததாக பூஜித் ஜயசுந்த தனக்கு தெரிவித்திருந்ததாகவும் ஹேமசிறி பெர்னாண்டோ குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும், குறித்த கருத்துக்களை மறுப்பதாக தெரிவித்து நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *